மாற்றங்கள் வந்தாலும் துரோகம் மாறவில்லை

இந்தியச் செய்திகள் செய்திகள்

அரசுகள் மாறினாலும் துரோகம் மாறவில்லையென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் மரணித்த ஈழத் தமிழ் உறவுகளை நினைவு கூறும் நிகழ்வொன்று நேற்று சென்னை பாரதி சாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம் என்றும், இதனை அரசாங்கம் மறுப்பது கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அருகேயுள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.

நினைவேந்தலை அடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தமிழக பொலிசாரினால் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Trending Posts