புதிய விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்த பணிப்புரை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு விவசாயக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது இதன் இறுதி இலக்காகுமென கண்ணொறுவ விவசாய தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தை நேற்று சென்று பார்வையிட்டதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். அத்துடன், வரட்சி மற்றும் ஏனைய காரணங்களால் கடந்த சில வருடங்களாக நாட்டின் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஐந்து சதவீதத்தால் குறைந்திருப்பதாகவும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Trending Posts