ஆசாத் காஷ்மீருக்கு அதிக அதிகாரம்?

உலகச் செய்திகள்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் பகுதியான ஆசாத் காஷ்மீருக்கு அதிகமான அதிகாரங்களை வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானின் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு அமைவாகஇ ஆசாத் காஷ்மீர் பகுதிக்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியான அதிகாரங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆசாத் காஷ்மீர் பகுதிக்கென தனியாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு நிர்வாகம் இடம்பெற்று வந்தபோதும்இ அதன் முக்கிய அதிகாரங்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

குறித்த பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து விடுவிப்பதற்கு தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையிலேயேஇ பாகிஸ்தான் அரசாங்கம் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான முடிவினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.