இலங்கை அகதி லண்டனில் குத்திக் கொலை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெற்கு லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அருனேஸ் தங்கராஜா என்ற 28 வயது இளைஞரே கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த நபருக்கு லண்டனில் குடும்பம் எதுவும் இல்லை எனவும், அவரது தந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.