பேருந்துக் கட்டண அதிகரிப்பிற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பேருந்து கட்டண அதிகரிப்புக்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதி பெறப்பட்டதன் பின்னர் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்வைக்கப்படுமென போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ள போதிலும், பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் பேருந்து சங்கங்கள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளன.

இதேவேளை, நாளை மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பிட்டிபன மீனவ தொழிற்சங்கம் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts