பசு வதைக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் (Photos)

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பசுக்கள் வதை செய்யப்படுவதற்கு எதிராகவும் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு எதிராகவும் தென்மராட்சி பொது அமைப்புக்கள் சில சாவகச்சேரியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

இன்று காலை 10.00 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன் ஆரம்பித்து நகரசபையை சென்றடைந்தது. இதன்போது, பசுக்களை வதைக்காதே, இறைச்சிக்காக பசுக்களை வெட்டுவதை தடை செய், இறைச்சிக்கடைகளை நிரந்தரமாக மூடு போன்ற கோசங்களை கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பியிருந்தனர்.

பசு வதைக்கு எதிராகவும் இறைச்சிக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறு கோரியும் ஊர்வலத்தின் இறுதியில் சாவகச்சேரி பிரதேச செயலருக்கும் நகராட்சி மன்றத் தவிசாளருக்கும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.