பளு தூக்கலில் கொக்குவில் மாணவனுக்கு தங்கம்

செய்திகள் விளையாட்டு

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் மனோஜன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

குருநகர் சென்.ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் 94 கிலோ எடைப் பிரிவில் 180 கிலோ பளுவைத் தூக்கி மனோஜன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.