சீரற்ற காலநிலையால் போக்குவரத்துத் தடை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எளுவன்குளம் சப்பத்து பாலத்திற்கு மேலாக 2 ½ அடி உயரத்தில் நீர் செல்வதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே புத்தளம் – மன்னார் வீதியில் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.