09 கடைகள் தீக்கிரை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மொனராகல – பொத்துவில் பாதையின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கடைகள் முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் குறித்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் 15 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கடைத்தொகுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.