தீர்வு கிடைக்கும் – அமைச்சர் மனோவின் நம்பிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும், நாளை, நாளை மறுநாள் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம், என்றாவது ஒருநாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.