கோங்சி கல்வி கண்காட்சி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கையைச் சேர்ந்த மாணவர்களை சீனா நோக்கி உள்ளீர்க்கும் திட்டத்தில் கோங்சி கல்வி கண்காட்சி கொழும்பில் நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் தங்களது கல்வியை தொடர விரும்பும் மாணவர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, முகாமைத்துவம், தொழில்நுட்பம், விஞ்ஞானம், மருத்துவம், சீன மொழி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில், 25 சீன கல்வி நிறுவகங்கள் இணைந்து இதனை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.