16 பேரின் கொள்கைத்திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, 21 அம்சங்களைக் கொண்ட கொள்கைத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

இதில் குறித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியமைக்கான காரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இவை குறித்து மக்களுக்கு விளக்களிக்கும் நோக்கில், நாடெங்கிலும் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் 26ஆம் திகதி மாத்தறையில் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts