அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விசாரணை

உலகச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இராஜாங்கத் திணைக்களத்தின் நீதித்துறை பிரிவு விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக தெரிவித்து, அமெரிக்காவின் பிராந்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பீ.ஐ ஏலவே விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த தேர்தல் காலத்தில் டொனால்ட் ட்ரம்பின் பிரசார நடவடிக்கைகளை எஃப்.பி.ஐ வேவு நோக்கியதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளில் எதும் முறைகேடுகள் இடம்பெற்றமை தெரியவந்தால், முறைகேடாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்க உதவி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •