2020இல் ஜனாதிபதி, பிரதமர் பிரச்சினையை எதிர்நோக்குவார்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாக இருந்து மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்யத் தவறினால், எதிர்வரும் 2020இல், அவ்விருவரும் பிரச்சினையை எதிர்நோக்குவார்களென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டன், பூல்பேங்க் தோட்டத்தில் மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 20 தனி வீடுகளை, பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (20) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், கடந்த 2015ஆம் ஆண்டு அமைச்சைப் பொறுப்பேற்றதிலிருந்து மலையகத்தில் லயன் முறையை ஒழித்து, நவீன வசதிகளுடன் கிராமங்களையும் தனி வீடுகளையும் அமைக்க வேண்டுமென்ற வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கமைய, இதுவரை 6,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அவை அரசியல் தொழிற்சங்க பேதங்களின்றி, மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.