பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தற்போதைய நிலை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கமானது பாரிய பின்னடைவுகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2004ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது வெறும் 165 உறுப்பினர்களின் எண்ணிக்கையே காணப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்தப் பின்னரே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், மேற்படி தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தேவையான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அதன் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களே இந்நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய ஊழியர் சங்கத்தில் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றத்துக்குப் பின்னர், தலைமைக்கு ஆதரவான 85 ஊழியர்கள் அச்சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.