கிரிக்கெட் நிறுவனத் தலைவர் தெரிவு: நால்வர் மனுத்தாக்கல்

விளையாட்டு

இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக நால்வர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி முன்னாள் தலைவர்களான திலங்க சுமதிபால, ஜயந்த தர்மதாஸ, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்களின் பெயர்களை கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் நாளைய தினத்திற்குள் முன்வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.