ராஜித பதவி விலக வேண்டும்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்துகளாக ஏற்றுக்கொள்ள முடியாது எனின், அவர் உடனடியாக பதவிவிலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் அமைந்துள்ள பிவிதுறு ஹெல உறுமயவின் காரியாலயத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழின படுகொலையை நினைவுகூரப்படுது நியாயமானது என்றும், பிரபாகரன் ‘மஹாத்மயா’ என்று குறிப்பிட்டமையும் அரசாங்கத்தின் கருத்தாக ஏற்றுகொள்ளப்படமாட்டாதென அமைச்சர்கள் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அமைச்சரவை பேச்சாளர் அரசாங்கத்தின் தகவல்களை உத்தியோகபூர்வமாக அறிவிப்பவர் எனவே அவரின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை என்று கூறுவதற்கான அதிகாரம் ஏனைய அமைச்சர்களுக்கு இல்லை எனவும், ஜனாதிபதி, பிரதமருக்கு அந்த அதிகாரம் உள்ளது. ஆனால் அவர்கள் அந்த கருத்தை ஏற்றுகொள்ளும் முன்னர் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவி விலக்க வேண்டும். இல்லாவிடின் அவரின் கருத்தையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.