பஸ் கட்டணத் திருத்தம் அமைச்சரவையில்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

புதிய பஸ் கட்டண திருத்தம் இன்று (22) அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்த போதிலும், அந்தக் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்ளாத தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

இதன் காரணமாக 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்திருந்த அதேநேரம் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு அமைவாக, குறித்த கட்டண திருத்தத்தை இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.