தென் மாகாணத்தில் விஷேட வைத்தியக் குழு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் நோயாளர்களை கண்காணிப்பு செய்வதற்காக நேற்றைய தினம் விஷேட வைத்தியர்கள் குழுவொன்று நேரில் விஜயம் செய்துள்ளது.

முன்னதாக தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அனில் திசாநாயக்கவின் தலைமையில் அங்கு சென்ற விஷேட வைத்தியர்கள் குழுவினர் இந்த வைரஸ் தொற்று தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு தொற்று நோய்ப் பிரிவின் விஷேட வைத்தியர்கள் குழுவொன்றை தென் மாகாணத்துக்கு அனுப்புமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் அனில் ஜயசிங்கவிற்கு வழங்கப்பட்ட ஆலோசனைப்படி இந்தக் குழுக்கள் அங்கு சென்றுள்ளன.

Trending Posts