தங்க நகைகளுடன் நால்வர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை நாட்டுக்கு கொண்டு வந்த நான்கு பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (22) அதிகாலை டுபாயில் இருந்து யூ.எல். 226 என்ற விமானம் மூலம் அவர்கள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது சுமார் 27 இலட்சம் ரூபா பெறுமதியான 450 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு மற்றும் கேகாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.