தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில், மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுகொடுக்கும் நோக்கில் அந்த பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி வேலைச்செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

20 ஆண்டு குறைந்த செலவுத்திட்டத்தை செயற்படுத்துமாறு கோரி, கடந்த 8ஆம் திகதி முதல், சட்டப்படி வேலைச்செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே, இந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.