அமெரிக்கா மீது ஈரான் கடும் கண்டனம்

உலகச் செய்திகள்

தமக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளமைக்கு, ஈரான் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வரலாற்றில் மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்தமை தொடர்பில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜாவிட் சாரிப் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இந்த அறிவிப்பின் மூலம், அமெரிக்காவின் தோல்வியடைந்த கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் இந்த செயற்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.