நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நூற்றுக்கு 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்கவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்த கட்டண அதிகரிப்பு இன்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.