இராணுவ வாகனம் மோதி இளைஞர் படுகாயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விஷேட அதிரடிப்படை வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது முத்துஐயன்கட்டு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.