பாதிக்கப்பட்டவர்களுக்காக 27 மில்லியன் ஒதுக்கீடு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமல்நாதன் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படையைச் சேர்ந்த 5000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஜிங் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையினால், காலி மாவட்டத்தின் நாகொட, வெலிவிட்டிய, திவித்துர, பத்தேகம, போப்பே, பொத்தல பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ்நிலங்களும், வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

அவசர நிலைக்கு முகங்கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.