நிவாரண நிதியை விரைந்து வழங்க உத்தரவு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை போதுமானளவு வழங்குவதற்கான நிதியை விரைவாக வழங்குமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர திறைசேறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் நிவாரணங்களை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட செயலாளர்களிடமிருந்து கிடைக்கும் கோரிக்கைகளுக்கமைய, குறித்த நிதி வழங்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.