16 பேரும் முன்னாள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இதன்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளதுடன், குறிப்பாக, அரசியல் ரீதியான முன்னோக்கிய பயணம், நாட்டின் நிலைமை மற்றும் கட்சியின் நிலைமை என்பன குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர ஆகியோரை சந்தித்துள்ளதாகவும் இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.