இலங்கையில் முதலீடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கையில் ஒருநாய் கூட முதலீடுகளை மேற்கொள்வதில்லையென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமான நிலையில், தினப்பணிகளை ஒத்திவைத்து, தற்போது நிலவும் வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை குறித்து விவாதம் நடத்தக்கோரி ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில் கோரிக்கை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் இன்று விலைவாசியாலும் இயற்கை அனர்த்தங்களாலும் தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும், இந்நாட்டின் முதலீடு குறித்து பேசுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால், இங்கு ஒருநாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து சபையை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

Trending Posts