கோட்டபாயவின் கொள்கையை விரைவில் கொண்டு வருவோம் – அமைச்சர் மலிக் சமரவிக்ரம

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட 2030ஆம் ஆண்டு பொருளாதார கொள்கையை, தாம் 2025இல் கொண்டு வந்து காட்டுவோமென அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டமூலம், மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த நாட்டுக்கு ஒரு நாய்கூட முதலீடுகளை மேற்கொள்ளவரவில்லையென எதிரிணியினர் தெரிவிப்பது அப்பட்டமான பொய். தற்போதைய ஆட்சிக்காலத்தில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இன்னும் ஒன்றரை மாதங்களில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைக்கப் பெறவுள்ளதுடன், ஆசிய நாடுகளுடன் இணைந்து ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம், ஆசிய பொருளாதார கொள்கையை பின்பற்றி, பொருளாதர வளர்ச்சியை எட்ட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டரீதியான, ஊழலற்ற வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதே, இந்த அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளாh.