மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்

செய்திகள் முக்கிய செய்திகள்

அரசாங்கத்திடம் இருந்தும் மழை வெள்ளத்திடம் இருந்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டமூலம், மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், அரசாங்கத்திலுள்ள பொறிமுறையாலேயே நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகவும், ஏதாவது ஒரு அனர்த்தம் வந்தாலும் அதனை முன்கூட்டிய ஆயத்தங்கள் எதுவும் முன்னெடுப்பதில்லை. அனர்த்தங்கள் ஏற்ப்பட்டதன் பின்னரே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், இந்த அரசாங்கத்திடம் இருந்தும் வெள்ளத்திடம் இருந்தும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மஹிந்த ஆட்சி காலத்தில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டபோது ஐ.தே.கவும் ஜே.வி.பியும் எதிர்த்த போதிலும், இன்று தாம் எதிர்த்த இந்த சட்டமூலத்தையே ஐ.தே.க கொண்டுவந்துள்ளமை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் செயல் என்றும், அமைச்சர் மலிக் கொமிஷனை எதிர்பார்த்தே இந்த சட்டமூலத்தை கைச்சாத்திட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •