தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையிலுள்ள தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் யோசனையொன்றை முன்வைத்துள்ளதன் பிரகாரம், சுய சுதந்திரத்தினை இழந்த நபர்களுக்கு விடிவினை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பில் இந்த ஒப்பந்தம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சு கைச்சாத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.