எ.டி.எம் பழுது பார்க்க வந்தவர்களால் பணம் கொள்ளை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

குருநாகல்,பெப் 05

குருநாகல் - கட்டுவன பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து இனந்தெரியாத சிலரால் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை பழுது பார்ப்பது போன்று நடித்து, குறித்த சந்தேகநபர்கள் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி கணக்கிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.