சீரற்ற காலநிலை: உயிரிழப்பு அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றத்தில் 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 7526 குடும்பங்களின் 27,621 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், 194 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.