தூத்துக்குடி சம்பவம்: உயர்நீதிமன்றின் அதிரடி உத்தரவு

இந்தியச் செய்திகள்

தமிழகம், தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட செயலகத்தின் முன்னிலையில், ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் வரையில் பலியாகியதைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் பொது மக்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக சில காவற்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, 3 சட்டத்தரணிகளால் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போதே உயிரிழந்தவர்களின் உடலங்களை பதப்படுத்துவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.