மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது – வாசுதேவ

முக்கிய செய்திகள் 1

திட்டமிட்டபடி உள்ளுராட்சித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேர்தலுக்கு அரசாங்கம் முழுமையாக தயாராக இல்லை என்பதால் தேர்தல் பிற்போடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் எதிர்வரும் 10 முதல் நாடளாவிய ரீதியில் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் குறித்த நீதிமன்றின் தீர்ப்பை அடுத்து கூட்டணியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகிச் செயற்படுகிறார் என்றும் குறிப்பிட்டார்.