நைட்ரைடர்ஸ் வெற்றி

விளையாட்டு

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வெளியேற்றல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நேற்று கொல்கத்தாவில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா அணி சார்பில், அணித் தலைவர் தினேஸ் கார்த்திக் 52 ஓட்டங்களையும், என்ரே ரசல் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதனையடுத்து, தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய, ராஜஸ்தான் ரோயல் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இந்தநிலையில், இன்று இடம்பெறவுள்ள இறுதி போட்டிக்கான தேர்வு போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts