கோப்பாய் சந்தியில் விபத்து: முதியவர் பலி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று (24) காலை இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை ராசரட்ணம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் கோப்பாய் சந்தியில் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, பின்புறமாக வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.