சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சட்டவிரோதமாக குவைட் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் இன்று அதிகாலை 1.10 மணியளவில் குவைட்டில் இருந்து வந்த குவைட் விமான சேவைக்கு சொந்தமான கே.யூ 349 என்ற விமானத்திலேயே இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபரிடம் இருந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான 30,000 சிகரெட்டுகள் உள்ளடங்கிய 150 பொட்டிகளை தனது பயணப்பையில் மறைத்து வைத்திருந்த போது கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சிகரெட்டுகளை அரசுடமையாக்கியதுடன், சந்தேக நபருக்கு 100,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.