நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சகோதரனுக்கும் மீண்டும் விளக்கமறியல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரர் ஒருவரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோர் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் மேல் நீதிமன்ற பதிவாளர் அஜித் ஜயசுந்தர முன்னிலையில் இன்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட வழக்கில் இவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், 2017ஆம் ஆண்டு ஜூலை 17 மாதம் தொடக்கம் இதுவரையில் இவர்கள் கையொப்பமிட வரவில்லையென பொலிஸார் நீதிமன்றில் தமது முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர்.

இதனால் ஏப்ரல் 4ஆம் திகதி சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடாமை காரணத்தால் இன்று (24) வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.