தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்தியர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களைக் கொண்டு வந்த 44 வயதுடைய இந்தியர் ஒருவரை இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த நிலையில், பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 100 கிராம் எடை கொண்ட 5 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 33 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை எனவும் சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.