124,733 பேர் பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 31,822 குடும்பங்களை சேர்ந்த 124,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சீரற்ற காலநிலையினால் 2199 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 35 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 751 ஏனைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும் மழை அல்லது காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.