மாணவர்கள் மத்தியில் போதை பாவனை அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

குருநாகல் மாவட்டத்தில் 15 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது, சிகரெட், கஞ்சா, குடு மற்றும் போதை மாத்திரை பாவனை இந்த மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே பரவலாக காணப்படுவதாக, போதைப் பொருள் பாவனையில் இருந்து நிவாரணம் அளிப்பது தொடர்பிலான செயலணியின் பணிப்பாளர் டொக்டர் சமந்த திதலவஆரச்சி தெரிவித்துள்ளார்.

இவற்றை பயன்படுத்துவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பதோடு, நித்திரை ஏற்படும் தன்மை குறைவடையுமென வியாபாரிகள் மாணவர்களின் மனதை மாற்றி அவற்றை விற்பனை செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.