சீனாவுக்கு நன்றி தெரிவித்த சர்வதேச வர்த்தக அமைச்சர்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

பாரிய அபிவிருத்தியடைந்துள்ள சீனாவுடன் இணைந்து செயற்படுவதானது, இலங்கைக்கு மேலும் நன்மை பயக்கும் எனவும், இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதையிட்டு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Trending Posts