கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான விஷேட அறிவித்தல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று தொடக்கம் உரிய ஆடையை அணிந்து பாடசாலைகளுக்கு சமூகமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டின் போது இலகுவான உடையொன்றை வழங்குவது தொடர்பான அத்தியாவசியத் தன்மை தொடர்பில் மருத்துவர்கள், கல்வி அமைச்சருக்கு தெளிவுபடுத்தியமைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இருக்கும் சுமார் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ஆசிரியைகளில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியைகள் பிரசவ விடுமுறையினை பெறுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Trending Posts