பாரிஸ் கிளப் அளித்த உறுதிமொழியை வரவேற்ற அமெரிக்கா

முக்கிய செய்திகள் 2

இலங்கைக்கான கடன் உத்தரவாம் குறித்து இந்தியா வழங்கிய உறுதிமொழியை அடுத்து பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் அளித்த உறுதிமொழியை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

பாரிஸ் கிளப்பின் இந்த அறிவிப்பை கண்டு மகிழ்ச்சி அடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரி மற்றும் சவூதி அரேபியாவுடன் இணைந்து சீனா உட்பட மீதமுள்ள நாடுகளின் வகிபாகத்திற்கு பாரிஸ் கிளப் விடுத்த அழைப்பிற்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுக்கும் இடையில் ஊழியர் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு இந்த உத்தரவாதங்கள் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.