சீனாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

உலகச் செய்திகள்

சீனாவிலுள்ள தமது இராஜதந்திரிகளை, அசாதாரண ஒலியலைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை செய்திருக்கிறது.

சீனாவிலுள்ள அமெரிக்க இராஜதந்திரி ஒருவர், மர்மமான ஒலியொன்றை கேட்டதன் பின்னர், அசாதாரண உடல் மற்றும் மனநிலைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கியூபாவிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளும் இவ்வாறான ஒலியலை தாக்குதலுக்குள்ளாகி இருந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியானவை என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.