நவீன வசதிகளுடனான வகுப்பறைகள்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சீனாவின் நிதியொதுக்கீட்டின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு பாடசாலைகளில், நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறைகளை நிர்மாணிக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக ஒன்றிய அங்கத்தவர்கள், நேற்றைய தினம் திருகோணமலைக்கு, மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது, திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சென். மேரிஸ் கல்லூரி, கந்தளாய் அக்ரபோதிய சிங்கள மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

அவ்விஜயத்தைத் தொடர்ந்து, மிகவிரைவில் இப்பாடசாலைகளில் நவீன மயப்படுத்தப்பட்ட வகுப்பறைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.