வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான 350 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 800 பேர் சிகிச்சைகளைப் பெற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான சிறார்கள் 08 மணித்தியாலங்களுக்கு மேல் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.