தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்களிடம் திணறிய எடப்பாடி

இந்தியச் செய்திகள்

தற்பாதுகாப்புக்காகவே பொது மக்கள் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க தலைமை செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் 13 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு கூறும் பதில் என்ன என்று செய்தியார்கள் வினவியதற்கே அவர் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவற்துறையினரின் உயிருக்கும் பொது மக்களின் உயிருக்கும் பெறுமதி வித்தியாசம் காணப்படுகின்றதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ள போது, நிலைதடுமாறிய தமிழக முதல்வர் வன்முறையை தூண்டும் விதத்தில் வினா எழுப்ப வேண்டாமென தெரிவித்து பதிலளிக்காமல் புறக்கணித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.