குற்றவாளியானார் ஞானசார தேரர்

செய்திகள் முக்கிய செய்திகள்

காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஜூன் 14ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •